லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: அனுஷ்கா அதிரடி

bg1தமிழ், தெலுங்கு சினிமா உலகில் வித்தியாசமான, அசாத்தியமான கதாபாத்திரங்களை ஏற்று திறமையாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இதனால், தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவரது ரசிகர்கள் இவரை தற்போது ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அனுஷ்காவிடம் கேட்டபோது, என்னுடைய ரசிகர்கள் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். சினிமாவில் உண்மையான சூப்பர் ஸ்டார்கள் நிறைய பேர், என்னைவிட நிறைய சாதித்திருக்கிறார்கள். அதில் நான் 5 சதவீதம்தான் சாதித்திருக்கிறேன். என்னை ரசிகர்கள் எப்போதும் ஸ்வீட்டி, அனுஷ்கா என்று அழைப்பதை நான் விரும்புகிறேன் என்றார்.

அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ‘ருத்ரமாதேவி’ படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி தெலுங்கில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ் பதிப்பும் விரைவில் வெளிவரவிருக்கிறது. மேலும், அனுஷ்கா நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதுதவிர, ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்துமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries