சூர்யாவின் பசங்க 2- படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

pasanga-2-suriyaசூர்யா நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் தலைப்பு முன்னதாக ‘ஹைக்கூ’ என்று வைக்கப்பட்டது. பின்னர், படத்தின் வரிவிலக்கிற்காக தற்போது ‘பசங்க-2’ என மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் அமலாபால் இணைந்து நடித்துள்ளார். முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தியே இப்படத்தை எடுத்திருப்பதால் இருவரும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்திலேயே நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் டீசரும், புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 17-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஆரோல் கொரல்லி இசையமைத்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். ‘பசங்க-2’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார். பாண்டிராஜும் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries