வேதாளம் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

12004813_871308982983878_8777614856844627236_n2-e1443419514662அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒரு சில காரணங்களால் டீசர் வெளியாவது தள்ளிப் போனது. எனவே, வரும் அக்டோபர் 8-ந் தேதி ‘வேதாளம்’ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘வேதாளம்’ படத்தின் டீசரை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் அஜித் கால் டாக்சி டிரைவராக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடித்து வருகிறார். அஜித்துக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online