குஷி பட இயக்குனர், தயாரிப்பாளருடன் இணையும் விஜய்?

ilayathalapathy-vijayவிஜய் நடித்து வெளிவந்துள்ள ‘புலி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் விஜய்க்கு 59-வது படமாகும்.

இந்நிலையில், விஜய்யின் 60-வது படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கிறாராம். இப்படம் காதல், காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, விஜய்-எஸ்.ஜே.சூர்யா-ஏ.எம்.ரத்னம் கூட்டணி இணைந்து ‘குஷி’ என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தது. இந்த கூட்டணி மீண்டும் இணைவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் நடிக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன், நயன்தாரா ஆகியோர் ஜோடியாக நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.எம்.ரத்னம் அஜித்தின் ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’, ‘வேதாளம்’ என தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online