விஜய்க்காக தனது கொள்கையை மாற்றிய சந்தானம்

Vijay-Santhanam‘புலி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த கூட்டணியில் தற்போது சந்தானம் இணைந்திருக்கிறார். சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன்.

காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய சந்தானம், தற்போது விஜய் நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். சந்தானம் ஏற்கனவே விஜய்யுடன் ‘சச்சின்’, ‘வேலாயுதம்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 59’ என்று அழைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும் இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்ததாகவும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries