பிரபு சாலமன் படத்தை முடித்த தனுஷ்

28-1438074025-dhanushstoryleakதனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கியுள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் ரெயில்வே கேட்டரிங்கில் பணிபுரிபவராக நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, பிரபு சாலமன் குழுவுடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செய்தேன் என்றார்.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படக்குழுவினர் அடுத்தகட்டமாக பின்னணி இசை சேர்ப்பு, டப்பிங் பணிகளில் கவனம் செலுத்த உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online