கடவுளே… இந்த நடிகைகளுக்கு அது இல்லையாம்

1444106821-9031நடிகைகளுக்கு அதுவும் அழகான நடிகைகளுக்கு எது இருக்கிறதோ இல்லையோ, ஈகோ கண்டிப்பாக இருக்கும்.

பலரும் ஈகோ ஃபேக்டரியாகத்தான் திரிகிறார்கள். ஆனால், இந்த நடிகைகளுக்கு அது இல்லையாம்.

புலி படத்தைப் பார்த்த தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு, பிரமாதமாக இருக்கீங்க என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். பொதுவாக எந்த நடிகையும் மற்றொரு நடிகையை புகழ மாட்டார்.

அப்படியே புகழ்ந்தாலும் நடிப்பைத்தான் புகழ்வார், தமன்னாவைப் போல் அழகை எல்லாம் வர்ணிக்க மாட்டார். இது கோடை மழை அல்லவா. குளிர்ந்து போன ஸ்ருதியும், நன்றி தெரிவித்ததோடு தமன்னாவை புகழ்ந்துள்ளார்.

கார்த்தி நடிக்கும் தோஸ்த் படத்தில் ஸ்ருதி ஒப்பந்தமாகி, அவர் விலகிக் கொண்டதால் இப்போது அந்த வேடத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

இப்படியொரு பின்புலம் இருந்தும் இருவரும் ஈகோ இல்லாமல் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டது திரையுலகுக்கே ஆச்சரியம்தான்.

(நடிகைகளிடம் இல்லாத அது, எதுவாக இருக்கும் என ஆவலுடன் உள்ளே வந்தவர்கள் மன்னிப்பார்களாக).

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online