இமான் அண்ணாச்சியை தேடி வரும் வாய்ப்புகள்

imaanதமிழ் சினிமாவில் இமான் அண்ணாச்சி தனக்கென்று தனிபாணியை வைத்திருக்கிறார். நெல்லை தமிழ் கலந்த அவரது காமெடிக்கு இப்போது தனிமவுசு ஏற்பட்டிருக்கிறது.

தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக இமான் அண்ணாச்சி நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப் நடிக்கும் படம், அமீர் நாயகனாக நடித்து இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், நிதின்சத்யா நடிக்கும் ‘கலாட்டா’ உள்பட 10 படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நகைச்சுவைக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நல்ல வேடம் கிடைத்தால் சம்பளம் பற்றி பேசாமல் உடனே நடித்து விடுகிறார். எனவே தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் இமான் அண்ணாச்சியை தேடுகிறார்கள். இதனால் வாய்ப்புகள் அதிகமாக தேடி வருகின்றன என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries