நடன இயக்குனர் லலிதாமணி வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பா?

Dance Master Lalitha Mani @ Kaliyuga Vettai Movie Launch Stills

Dance Master Lalitha Mani @ Kaliyuga Vettai Movie Launch Stills

சினிமா நடன இயக்குனர் லலிதாமணிக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி வீடு வளசரவாக்கம் வள்ளியம்மை நகர், சாஸ்தா நகர் முதல் தெருவில் உள்ளது. இங்கு குறும்படம் எடுப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக் கணக்கில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.

இங்கு மொட்டை மாடியில் தொட்டிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாகவும், 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடிகள் வளர்ந்து இருப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டுக்கு சென்று மொட்டை மாடியில் இருந்த செடிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அங்கு குடியிருந்த 5 பேரை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மொட்டை மாடியில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசாரிடம் கேட்ட போது, நாங்கள் கஞ்சா செடி எதையும் கைப்பற்றவில்லை, ரகசிய தகவல் வந்தது, அதன் பேரில் 5 பேரிடம் விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே பிடிபட்ட 5 பேர் கொடுத்த தகவலின் பேரில் லலிதா மணியின் உறவினர் அபிஷேக் என்பவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரை தேடி போலீசார் சென்றுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries