16ம் தேதி வெளியாகும் மய்யம்

2015-album-mayyam-tamil-cinema-3458பிரபல ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீதர் தயாரித்திருக்கும் படம் ‘மய்யம்’. வங்கி ஏடிஎம் கொள்ளை, பாதுகாப்பின்மையை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கதை திரைக்கதையை உருவாக்கிய ஸ்ரீதர், தனது ஸ்கெட்ச்புக் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆதித்யா பாஸ்கரன் என்ற மாணவர் இயக்கியிருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் கே.ஆர். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் 27 அறிமுக கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இதில் 12 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்திருக்கிறார். நடிப்பு தவிர தொழில்நுட்ப பணிகளிலும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு இப்படத்தில் உள்ளது.

இப்படம் ஒரே இரவில் நடக்கும் கதை. வங்கி ஏடிஎம்-களில் எந்த நேரத்திலும் பணம் எடுக்கலாம் என்ற வசதி இருக்கிறது. ஆனால், பல இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் பணத்தை எடுத்துச் செல்வோருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையின் பிரதிபலிப்பே மய்யம் படத்தின் கதை.

இப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 1 மணி நேரம் 57 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை, வருகிற 16ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online