பாகுபலியை மிஞ்ச தயாராகும் தெலுங்கு படம்

14hyskm04-For-T_hy_2406871gரூ.120 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் உருவான ‘பாகுபலி’ உலகம் முழுவதும் இதுவரை ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது. இதன் வெற்றியும், இயக்குனர் ராஜமவுலி அவரது படக்குழுவினருக்கு கிடைக்கும் பாராட்டுகளும் ‘பாகுபலி–2’க்கு உள்ள எதிர்பார்ப்பும், திரை உலகத்தை புரட்டிப் போட்டிருக்கிறது.

நூலகத்திலும், புத்தக அலமாரியிலும் யாரும் கவனிக்காமல் மடங்கி கிடந்த பல சரித்திர கதைகளை, தூசு தட்டி எதை படமாக்கலாம். எப்படி பாகுபலியை மிஞ்சலாம் என்ற சினிமா தயாரிப்பாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியில் பாஜிரோ மஸ்தானி என்ற படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. தமிழில் இயக்குனர் ஜெகநாதன் தஞ்சை பெரிய கோவிலை வைத்து படம் எடுக்கப் போவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தெலுங்கில் பாகுபலியை முறியடிக்கும் வகையில் யார் படம் தயாரிப்பது என்று கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கு நடிகரும் இயக்குனருமான மஞ்சு விஷ்ணு ஹாலிவுட் தரத்தில் ஒரு சரித்திர படத்தை தயாரித்து அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

ரூ.250 கோடி செலவில் உருவாக இருக்கும் இந்த படத்துக்கு ‘பக்த கண்ணப்பா’ என்று பெயர் சூட்ட முடிவு செய்துள்ளனர். மஞ்சு விஷ்ணு இதற்காக ஹாலிவுட்டில் இருந்து கிராப்பிக்ஸ் குழுவினரை வரவழைத்துள்ளார். முதல் கட்ட பணிகள் தொடங்கி விட்டன.

இந்த படத்தில் இந்தி, தெலுங்கு, தமிழில் உள்ள பெரிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள மஞ்சு விஷ்ணு, அவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் பிரபல இயக்குனர் தனிவேல பரணி இயக்கலாம் என்று கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries