புலி படத்தை குறை சொல்பவர்கள் ரசிக்க தெரியாதவர்கள்: டி.ராஜேந்தர்

t-rajendar-at-puli-audio-launchதமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி இருக்கும் விஜய்யின் ‘புலி’ படம் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த ரஜினி புலி பட குழுவினரை பாராட்டினர்.

டி.ராஜேந்தர் குடும்பத்துடன் சென்று புலி படத்தை பார்த்தார். அதுபற்றி அவர் கூறியதாவது:–

இது வழக்கமான படம் இல்லை. சமீப காலத்தில் இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை. என் படங்களுக்கு பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்துவேன். புலி படத்தில் பிரமாண்ட செட்களை பார்த்து பிரமித்து போனேன். கிராபிக்ஸ் மிக நன்றாக இருக்கிறது.

கரும்புலி, பேசும் பறவை, ஆமை, நகரும் பாறை என்று வித்தியாசமாக யோசித்து இருக்கிறார்கள். காட்சிகளை அழகாக காட்டி கதை சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. புதிய விஷயங்கள் நிறைய உள்ளன. படம் நன்றாக இருக்கிறது.

குழந்தைகளுடன் சென்று குடும்பமாக ரசித்து மகிழும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் இந்த படத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என்று அனைவரும் பொருந்தமாக இருக்கிறார்கள். நான் குடும்பத்துடன் இந்த படத்தை கண்டுகளித்தோம். சிரித்து மகிழ்ந்தோம்.

சிலர் வேண்டும் என்றே இந்த படத்தைப் பற்றி தவறான கருத்துக்களை சமூக வளைத்தளங்களில் தெரிவிக்கிறார்கள். அவர்கள் ரசிக்கத் தெரியாதவர்கள் ரசனை இல்லாதவர்கள் பொறாமை காரணமாக இப்படி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நானே அதற்கான முயற்சிகளில் இறங்குவேன் என்றார்.

ராஜேந்தர் மனைவி உஷா ராஜேந்தர் மகள் இலக்கியா, ஆகியோரும், புலி படம் நன்றாக இருக்கிறது. குடும்பமே பார்த்து குதூகலிக்கும் கதை என்று கூறினார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online