தூங்கா வனம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை சோல்ட் அவுட்

1443769369-608கமல் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து நடித்திருக்கும், தூங்கா வனம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமை விற்கப்பட்டுள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அதனை வாங்கியுள்ளார்.

கமல் படங்கள் கடைசி நேரத்தில் பிரச்சனையை சந்திப்பதும், இழுபறிக்குப் பிறகு வெளியாவதும் வாடிக்கையான ஒன்று. உத்தம வில்லனுக்கு நடந்த பஞ்சாயத்துகள் அனைவரும் அறிந்ததே.

அதையடுத்து வெளியான, பாபநாசம் படமும் சிக்கலை சந்தித்தது. உத்தம வில்லனுக்கு நஷ்டஈடாக, 30 கோடிகளில் ஒரு படத்தை திருப்பதி பிரதர்ஸுக்கு எடுத்துத்தர கமல் உறுதியளித்திருந்தார்.

அந்தப் படத்தை எடுக்காமல் எப்படி தூங்கா வனம் படத்தை கமல் தயாரிக்கலாம் என்று, பாபநாசம் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். பிறகு கமல் தரப்பினரின் சமாதானப் பேச்சால் பிரச்சனை எதுவுமின்றி பாபநாசம் வெளியானது.

தூங்கா வனத்துக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்ற நம்பிக்கையில், தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். கடைசியில், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உரிமையை வாங்கியுள்ளார். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries