கடவுள் அருளால் எனக்கு நல்ல படங்கள் அமைகின்றன: அனுஷ்கா பேட்டி

Anushkas-Rudhramadeviஅனுஷ்கா நடித்த ‘பாகுபலி’ படம் சமீபத்தில் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து ‘ருத்ரமாதேவி’ என்ற படம் வெளிவர இருக்கிறது. இதில், ராணி கதாபாத்திரத்தில் வருகிறார். தொடர்ந்து சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பது குறித்து அனுஷ்கா ஐதாராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘அருந்ததி’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதுபோல், ‘பாகுபலி’ படமும் பெயர் வாங்கிக்கொடுத்தது. தொடர்ந்து ‘ருத்ரமாதேவி’ படம் வெளிவர இருக்கிறது. ‘ருத்ரமாதேவி’ படத்தில் ரொம்ப சிரமப்பட்டு நடித்தேன். 2½ வருடமாக இதன் படப்பிடிப்பு நடந்தது. கத்திச்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்று, இதில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.

‘மேக்கப்’ போட மட்டும் 2½ மணி நேரமானது. யானையின் மேல் பல மணிநேரம் உட்காரவைத்து படப்பிடிப்பு நடத்தினர். அப்போது வெயில் கொளுத்தும். அதை தாங்கிக்கொண்டு நடித்தேன். எனக்கு புகை ஆகாது. ஆனாலும், சுற்றிலும் ஊதுவத்திகளை கொளுத்திவைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள்.

அந்த புகையில் சளி பிடித்தது. காய்ச்சல் வந்தது. காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு போவேன். நள்ளிரவு வரை படிப்பிடிப்பை நடத்துவார்கள். ரொம்ப சிரமப்பட்டு நடித்து முடித்தேன். ‘அருந்ததி’ போல் இந்த படமும் நன்றாக வந்துள்ளது. ஏழுமலையான் அருளால் எனக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமைகின்றன”.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online