தங்கமகன் ஆனது விஜபி-2

Thangamaganதனுஷ்-அமலாபால் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த இப்படக் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்து பணியாற்றிய விரும்பியது. அதைத் தொடர்ந்து தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க வேல்ராஜ் களமிறங்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு தலைப்பு வைக்காமல் ‘விஜபி-2’ என்று தலைப்பு வைத்து அழைத்து வந்தனர். மறுபுறம், இப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் கிடையாது என்றும் படக்குழுவினர் கூறி வந்தனர். இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது ‘தங்க மகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries