ஆச்சி மனோரமா உடலுக்கு விஜய், அஜித் நேரில் அஞ்சலி

vijay-pays-homage-to-legendary-actress-manorama-aachi_144454426640உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமான பழம்பெரும் நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி, மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு ஆகியோரும் வந்திருந்தனர்.

நடிகர் விஜய்யும் மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அஜித்குமாருக்கு மனோரமாவின் உறவினர்களை அறிமுகப்படுத்த, அவர்களுக்கு ஆறுதல் கூறினார் அஜித்.

இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் பாலா, ராதாரவி. சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மனோரமாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries