ஆசைப்பட்டது சமந்தா, கிடைத்தது கர்பந்தா

1444645401-9264
ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம், புரூஸ் லீ இன்று பூஜையுடன் தொடங்கியது.

பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு முதலில், பாட்ஷா என்கிற ஆண்டனி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். பாட்ஷா பெயரை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் படத்தின் பெயரை புரூஸ் லீ என மாற்றினர்.

அதேபோல் படத்தில் நாயகியாக நடிக்க சமந்தா முதல் நயன்தாராவரை பல நடிகைகளை முயற்சி செய்தனர். ஜீ.வி.க்கு இருக்கும் பேட் பாய் (படத்தில்தான்) இமேஜ் காரணமாக யாரும் கால்ஷீட் தரவில்லை. தற்போது கன்னடத்தில் நடித்து வரும் கீர்த்தி கர்பந்தாவை நாயகியாக்கியிருக்கிறார்கள்.

அதிரடி நாயகனின் பெயரைக் கொண்ட படமாக இருந்தாலும் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதாம் படத்தில். அதனால் 2016 ஃபெப்ரவரி 14 -ஆம் தேதி காதலர் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries