ராய் லட்சுமியை தேடி வந்த வாய்ப்பு

1444630662-2279ராய் லட்சுமி இப்போது இந்தியில் இரு படங்களில் நடிக்கிறார்.

அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மேலும் ஒரு வாய்ப்பு தமிழில் அவரை தேடி வந்திருக்கிறது.

இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு, அவ்வப்போது தமிழிலும் நடித்து வந்தார், நட்டி. சதுரங்க வேட்டை படம் அவரை தமிழில் பிரபலப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால், விஜய்யின் புலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போனார். புலி வெளியான நிலையில், அடுத்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

தாஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் நட்டியின் ஜோ‌டியாக நடிக்க ராய் லட்சுமியை கேட்டிருக்கிறார்கள். நாயகி வாய்ப்பு, அவரும் சரி சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries