சிம்புக்கு மீண்டும் சறுக்கல் – கைவிடப்பட்டது செல்வராகவனின் கான்

kaan-ctnமூன்று வருடங்கள் முக்கி முனகி வெளிவந்து மூன்று நாள் ஓடியது, சிம்புவின் வாலு. பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த, இது நம்ம ஆளு எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளது.

இப்படியொரு இடியாப்ப சிக்கலில், செல்வராகவனின் கான் படத்தில் நடிக்கிறேன், கௌதமின், அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிக்கிறேன், இரண்டு படங்களும் அடுத்த வருடம் ரிலீஸ் என்று ரசிகர்களை தெம்பூட்டிக் கொண்டிருந்தார், சிம்பு. அந்த பலூனிலும் பெரிய சைஸில் பொத்தல்.

சிம்பு, கேத்ரின் தெரேஸா, ஜெகபதி பாபு, தாப்ஸி ஆகியோரை வைத்து செல்வராகவன் எடுத்து வந்த கான் படம் பைனான்ஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக ஸ்பீடு பிரேக்கா இல்லை நிரந்தர ஷட் டவுனா என்பது தெரியவில்லை. செல்வராகவன், சிம்பு இருவரின் ராசிப்படி பார்த்தால்,

கான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online