என் வாழ்க்கையில் எனக்கு இருப்பது இரண்டு சவால்கள்: நமீதா

namitha-kapoor-latest-slim-still-photos-picture-3தமிழ் பட உலகில் ‘ஓகோ’ என்ற இருந்த நமீதா சில வருடங்களாக காணாமல் போய் விட்டார். ஒரு சில கன்னடப்படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

உடல் எடை அதிகமானதால் நாயகியாக நடிப்பதற்கு அவரை யாரும் அணுகவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் எடையை குறைத்து ‘ஸ்லீம்’ ஆகி இருக்கும் நமீதா இப்போது, மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். தமிழிலும் வாய்ப்பு வந்துள்ளது. தனது மறு பிரவேசம் குறித்து நமீதா சொல்கிறார்…..

எனது திரை உலக வாழ்க்கையில் எனக்கு இருப்பது இரண்டு சவால்கள் தான். ஒன்று உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது. இன்னொன்று மொழி கற்பது.

எனது எடை அதிகமானதால் சில திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. இந்த சவாலை சமாளித்து எடையை குறைத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்காக அளவான சாப்பாடு, உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகியவற்றை கடை பிடிக்க வேண்டும் என்று என்னுடைய உடற்பயிற்சி நிபுணர் கூறினார்.

அவருடைய ஆலோசனைப்படி நடந்தேன். தினமும் குறிப்பிட நேரம், தவறாமல் உடற்பயிற்சி செய்தேன். காலை 5 மணிக்கு கண்விழித்தேன். இரவு 8 மணிக்கு தூங்கச் சென்று விடுவேன்.

3 மாதங்கள் செய்த கடுமையான பயிற்சி காரணமாக என் உடல் எடை குறைந்தது. எப்போது என்னை பார்ப்பவர்கள் எப்படி எடையை குறைந்தீர்கள்? இப்போது மிகவும் அழகாக இருக்கீர்கள் என்று கூறுகிறார்கள்.

இதை என்னிடம் கேட்பதற்காகவே ஏராளமான போன்கள் வருகின்றன. அதே சமாளிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இப்போது உடல் எடையை குறைத்து அந்த சவாலை வென்று விட்டேன்.

நான் நடிக்கும் படங்களில் அந்த மொழியில் நானே பேச வேண்டும் என்பதும் அதை சாதிக்க வேண்டும் என்பதும் மற்றொரு சவால் அதையும் வெல்ல முயற்சி செய்து வருகிறேன்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries