புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் தேர்வு

Tamil-film-Kutram-Kadithal-makes-it-to-International-Fest_SECVPFபுதுமுகங்கள் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் ‘குற்றம் கடிதல்’. வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்த இப்படத்தை புதுமுக இயக்குனர் பிரம்மா இயக்கியிருந்தார்.

இப்படம் வெளிவருவதற்கு முன்பே தேசிய விருது மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வாங்கி பெருமை சேர்த்தது.

இந்நிலையில், 2015-ம் ஆண்டின் புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ‘குற்றம் கடிதல்’ தேர்வாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இயக்குனர் பிரம்மாவிற்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி விருது அளிக்கவுள்ளார்.

வெளிவருவதற்கு முன்பும், படம் வெளிவந்த பின்பும், பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் ‘குற்றம் கடிதல்’ படம் வாங்கி குவித்து வருவதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ் தயாரித்து, வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online