மணிரத்னம் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகல்

Keerthy-Suresh_0_0_1‘ஓ காதல் கண்மணி’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்துக்கான நடிகர்–நடிகைகள், தொழில் நுட்ப பணியாளர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு கீர்த்தி சுரேசை மணிரத்னம் தேர்வு செய்திருக்கிறார். நித்யா மேனன் நடிக்கிறார் என்று முதலில் தகவல் வெளியானது.

இவர்களில் துல்கர் சல்மான் 2 மலையாளப் படங்களில் நடிப்பதால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அவருக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் நானி சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்போது கீர்த்தி சுரேசும் இருந்து விலகி இருக்கிறார். கால்ஷீட் ஒத்து வராததால் இதில் நடிக்க முடியவில்லை என்று கூறி உள்ளார். இவருக்குப் பதிலாக தெலுங்கு படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை சானியா கெர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

படத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கார்த்தி, நித்யாமேனன் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த புதிய படத்தில் நடிப்பவர்கள் பற்றிய பெயர் விவரம் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online