டானாக மாறும் கணேஷ் – கசிந்ததா வேதாளம் கதை?

1444919364-0217ஆக்ஷன் படம் என்றால், பாட்ஷாவின் சாயல் இல்லாமலா? அஜித்தின் வேதாளம் படத்தின் கதை என்று இணையத்தில் உலவும் கதையிலும், பாட்ஷாவின் சாயல் நிறையவே இருக்கிறது.

வேதாளம் படத்தில் அஜித்தும், லட்சுமி மேனனும் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். அண்ணனின் பெயர் கணேஷ், தங்கையின் பெயர் தமிழ். பிளாஷ்பேக்கில் வரும் அஜித்தின் பெயர் வேதாளம். ஏன் அந்த பெயர்? வேதாளம் என்ற டான் அவதாரம் எதற்காக என்பது கதை.

வேதாளம் படத்தின் கதை, மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த, உஸ்தாத் படத்தின் கதையை ஒத்திருப்பதாகவும் கூறுகின்றனர். சொந்த கிராமத்தில் சின்னதாக வியாபாரம் செய்பவராக வரும் மோகன்லால், மும்பையின் மிகப்பெரிய தாதா.

மும்பையில் அவரது பெயர் உஸ்தாத். வேதாளத்தைப் போலவே உஸ்தாதிலும் மோகன்லாலுக்கு ஒரு தங்கை உண்டு. திவ்யா உண்ணி அந்த வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த ஒற்றுமை காரணமாக, மலையாளப்படம்தான் வேதாளமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries