பாலா படம் – வாலன்ட்ரியா வன்முறைக்குள் இறங்கும் அரவிந்த்சாமி…?

1444886315-0644பேரு கிடைக்கும், புகழ் கிடைக்கும், விருதுகூட கிடைக்கும் என்றாலும், பாலா படம் என்றால், தயங்கத்தான் செய்கிறார்கள் நடிகர்கள்.

யதார்த்தமா காட்டுறேன்னு தலைக்கு செம்பட்டை பெயின்டும், உடம்புக்கு தாரும் அடித்து மொட்டை வெயில்ல காயப்போடுவாருடா என்று நடித்தவர்கள் ரகசியமாக பதறுவதுண்டு.

சண்டைக் காட்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆம்புலன்ஸையும் ஐந்தாறு டாக்டர்களையும் வைத்துக் கொண்டுதான் படப்பிடிப்பே நடக்கும்.

தாரை தப்பட்டை படத்தில் சசி குமாருக்கு கை உடைந்து, தோள்பட்டை பிறண்டு இல்லாத வலியெல்லாம் அனுபவித்தார். நாயகி வரலட்சுமிக்கும் சரியான அடி. சுருக்கமாக, பாலா படத்தில் நடிப்பது வாலன்ட்ரியாக வன்முறைக்குள் இறங்குவதைப் போன்றது.

பாலா தனது அடுத்தப் படத்தில் அரவிந்த்சாமியை நடிக்க வைக்கப் போவதாக ஒரு செய்தி உலவுகிறது. தேக்கு உடம்பு விஷாலுக்கே பாலா ட்ரீட்மெண்டால் நாக்குத் தள்ளிப் போன நிலையில், அரவிந்த்சாமி மாதிரியான ஆப்பிள் மனிதர்களின் கதி என்னவாகுமோ என்று இன்டஸ்ட்ரி கவலைப்படுகிறது.

தனி ஒருவனின் விதி அப்படியாக இருந்தால் யாரால் என்ன செய்ய முடியும்?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries