விஜய்யை கலாய்க்கிறாங்க – காவல்நிலையத்தில் புகார் தந்த ரசிகர்கள்

1443609414-0788இணைய வளர்ச்சி எதை நோக்கி போய்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அன்று போஸ்டரில் சாணி அடித்தவர்கள் இன்று இணையத்தில் மீம்ஸ் என்ற பெயரில் பிரபலங்களை கலாய்க்கிறார்கள்.

அதிலும் விஜய் என்றால் அவர்களுக்கு அல்வா மாதிரி. விஜய் படம் வெளியாகிற போது, படத்தைப் பார்க்காமலே விஜய்யையும், படத்தையும் கலாய்க்கிறோம் என்ற பெயரில் கிழித்து தோரணம் கட்டுவது இவர்களுடைய வேலை.

விஜய் ரசிகர்களும் முடிந்த அளவுக்கு பதிலடி கொடுப்பார்கள். ஆனால், எதிர்தரப்பு ரொம்ப ஸ்ட்ராங்க். ஈடுகொடுக்கவே முடியாது. இதுக்கு மேலும் இதனை தாங்க முடியாது என்றநிலையில்…

விஜய் ரசிகர்கள் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நடந்தது குமரியில்.

குமரி மேற்கு மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் ஜோஸ் பிரபு தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் சகாயம் உள்பட ஏராளமான விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது –

நடிகர் விஜய் மக்களுக்கு செய்யும் நற்பணிகளை தமிழக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக விஜய்யையும், அவருடைய குடும்பத்தாரையும் இணையதளம் மூலம் அவமானப்படுத்தியும், அருவருக்கத்தக்க, சகிக்க முடியாத வாசகங்களால் சித்தரித்தும் வந்து கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இணையதள முகவரியில் இருந்த பக்கம் நீக்கப்பட்டது.

1443691647-3363ஆனால் மீண்டும் அந்தப் பக்கம் செயல்படத்தொடங்கி, வழக்கம்போல் அவதூறுகளை பரப்பி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள லட்சோபலட்ச ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம்.

எனவே விஜய் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் இணையதளத்தை இயக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்தும், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் உள்ள அருவருக்கத்தக்க பக்கங்களை நீக்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். – இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஒரு நடிகரை கலாய்க்கிறார்கள் என்பதற்கு அவரது ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார் தந்தது உலக வரலாற்றில் இதுதான் முதலாவதாக இருக்கும்.

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries