வேதாளம் படத்தின் ஆளுமா டோலுமா பாடல் டீசர்: அஜித் ரசிகர்கள் உற்சாகம்

1444890446-7541நேற்று நள்ளிரவு, வேதாளம் படத்தின் “ஆளுமா டோலுமா” என்ற ப்ரோமோ பாடல் அனிருத்தின் அதிரடி இசையில் வெளியாகி தல ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அஜித்குமார் தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இரண்டாவது முறையாக வேதாளம் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பாக சிவாக இயக்கத்தில் வீரம் படம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து வேதாளம் படத்தின் எதிர்பார்ப்பு தல ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி அனைத்து அஜித் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது.

நேற்று நள்ளிரவு, இப்படத்தின் “ஆளுமா டோலுமா” என்ற ப்ரோமோ பாடல் அனிருத்தின் அதிரடி இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது வேதாளம் படத்தின் ப்ரோமோ பாடல் டுவிட்டாில் ஹாஷ் டாக் ( #Aaluma Doluma ) கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து தல ரசிகர்கள் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளான நாளை சென்னை சத்தியம் தியேட்டரில் நடைபெறுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries