மீண்டும் ஒன்றிணையும் மோகன்லால், கௌதமி

1444893341-0383கௌதமி மோகன்லாலுடன் இணைந்து நடித்தப் படம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா.

லோகிததாஸின் திரைக்கதையில் உருவான இப்படம் இன்றும் மலையாள சினிமாவின் மைல் கல்லாக விளங்குகிறது. ரவீந்திரன் மாஸ்டரின் அமர்க்களமான இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் அற்புதங்கள்.

1990 -இல் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா வெளியானது. 25 வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லால், கௌதமி ஒன்றிணைகிறார்கள்.

இவர்கள் இணையும் படம், தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகிறது. சந்திர சேகர் ஏலெட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இன்னும் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமலே உள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries