மீண்டும் தள்ளிப்போகும் அனுஷ்கா படம்

Anushka-fatஅனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘ருத்ரமாதேவி’. இப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தவிர அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் உருவாகியிருக்கிறது.

இப்படம் முதலில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தள்ளிப்போய் அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டது. இறுதியாக ‘ருத்ரமாதேவி’ படத்துடன் இணைந்து ஒரே நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அதுவும் தள்ளிப் போனது.

இதையடுத்து அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கிறார். ‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா-அனுஷ்கா இணைந்து நடித்திருக்கும் படம் இது.

இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கியிருக்கிறார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. மரகதமணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்னும் பெயரில் உருவாகிறது.

இப்படம் எடை குறைப்பு பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது. இதில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூட்டி நடித்திருக்கிறார். இதனால் இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online