மணிரத்னம் படத்திலிருந்து கார்த்தியும் விலகினா

1444981529-2554மணிரத்னம் படத்துக்கு என்னாச்சு…? துல்கர் சல்மானில் தொடங்கி கீர்த்தி சுரேஷ், கார்த்தி என ஒவ்வொருவராக விலகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து, பழிவாங்கும் கதையொன்றை மணிரத்னம் இயக்கப் போவதாக கூறப்பட்டது. ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்வதாகவும் முடிவானது.

துல்கர் சல்மான், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை தொடங்குவதாக திட்டம்.

தமிழில் தயாராவதாக இருந்த இந்தப் படத்தை, கடைசி நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்க மணிரத்னம் முடிவு செய்தார்.

அதனால் இந்த வருட இறுதியில் தொடங்குவதாக இருந்த படப்பிடிப்பு அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போனது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக துல்கர் சல்மான் முதலில் படத்திலிருந்து விலகினார். பிறகு கீர்த்தி சுரேஷ்.

தற்போது கார்த்தியும் படத்திலிருந்து விலகியுள்ளார்.

துல்கர் சல்மானுக்குப் பதில் நானியை ஒப்பந்தம் செய்த மணிரத்னம், கார்த்திக்குப் பதில் ஃபகத் ஃபாசிலிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online