வேதாளம் படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி கைப்பற்றியது – படம் தீபாவளி ரீலிஸ்

1445080596-4295வேதாளம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமான வேதாளம் படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் அஜித்தின் 56 வது படமாகும். மேலும் படப்பிடிப்பின்போது சண்டை காட்சிகளில் அஜித் காயமான போதும் தன்னுடைய கட்சிகளை குறித்த நேரத்தில் முடித்து கொடுத்தார். இதனால் படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது.

அஜித்திற்கு ஜோடியா ஸ்ருதிஹாசன், சகோதரியாக லட்சுமி மேனன், வில்லனாக ராணா மற்றும் ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து இருக்கிறார்.

படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு அனைத்துமே முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளன. தற்போது post production பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

வேதாளம் படத்தின் இசை வெளியீட்டு விழா அனிருத்தின் பிறந்தநாளான நேற்று வெளியிடப்பட்ட நிலையில் தீபாவளியன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேதாளம் படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாகவும், தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே நடைபெற்ற பேரத்தில் ஜெயாடிவி அதிக வேலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக, அஜித்தின் என்னை அறிந்தால், ஆரம்பம் உள்ளிட்ட படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ஜெயா டிவி வேதாளம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை தற்போது கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online