ஷங்கரை கவர்ந்த நானும் ரவுடிதான் பாடல்கள்

1445062821-0895எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும், தமிழ் திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிப்பவர், இயக்குனர் ஷங்கர்.

ஒரு நல்ல படத்தைப் பார்த்தால், நல்ல இசையை கேட்டால், ஷங்கரிடமிருந்து உடனடியாக பாராட்டுவரும்.

அனிருத் இசையமைத்துள்ள, நானும் ரவுடிதான் படப்பாடல்களை கேட்ட ஷங்கர், “நானும் ரௌடிதான் படத்தின் பாடல்களை கேட்டேன். அனிருத் இசையில் வெளியான மற்றுமொரு அழகான ஆல்பம்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘நீயும் நானும்’, ‘காதல் என்பது மாயவலை’, ‘தங்கமே’ ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது” என்றார்.

ஷங்கரின் இந்தப் பாராட்டு, நானும் ரவுடிதான் படத்துக்கு இசையமைத்த அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று அனிருத்தின் பிறந்தநாள். பிறந்தநாள் அன்று பிரமாண்ட இயக்குனரிடமிருந்து பாராட்டு. மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online