கமலின் தூங்கா வனத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி

1443769369-608ஒரு வருட காலத்துக்கு எந்தத் தமிழ்ப் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் வாங்கப்போவதில்லை என தமிழ் தனியார் சேனல்கள் அறிவித்து, அதனை கடைபிடித்து வருகின்றன.

சன் தொலைக்காட்சி மட்டும் இந்த கதவடைப்பில் சேரவில்லை. எங்களுக்கு விருப்பமான படங்களை வாங்குவோம் என்ற நிலைப்பாட்டில் சன் தொலைக்காட்சி உள்ளது.

கமலின் பாபநாசம், விஜய்யின் புலி படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியவர்கள், கமலின் புதிய படமான தூங்கா வனத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் வாங்கியுள்ளனர்.

இந்தப் படம் தெலுங்கில் சீக்கட்டி ராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியாகிறது. அப்படத்தின் தெலுங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையையும் சன் வாங்கியுள்ளது.

ஊரே காய்ந்தாலும் கமலின் ஊருணியில் மட்டும் தண்ணிக்கு பஞ்சமில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries