ரஜினி, கமல் கருத்துக்கு கவுண்டர் அடித்த கவுண்டமணி

goundamani-says-his-birth-date-and-age-are-wrongநடிகர் சங்க தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டு வருகின்றனர். இதில் வாக்களிக்க பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

இதில் ரஜினி வாக்களித்துவிட்டு, தேர்தலில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

அதுபோல் கமல் கூறும்போது, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று கூறினார்.

இதற்கு கவுண்டர் கொடுக்கும் வகையில், நடிகர் கவுண்டமணி வாக்களித்துவிட்டு நடிகர் சங்கம் என்று பெயர் இருந்தால் போதும் என்று கூறியிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online