தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: நடிகர், நடிகையரின் கருத்து

Sarath-Kumarதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நடிகர், நடிகைகளும், நாடக நடிகர்களுக்கு நேரில் வந்து வாக்களித்து வருகின்றனர். நடிகர் சங்க தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் எப்பாஸ் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களித்த பிறகு பிரபலங்கள் அளித்த பேட்டி வருமாறு:

சரத்குமார் : தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்ற ரஜினி கோரிக்கை வைத்துள்ளார். எனவே, அதை மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான பணிகளை விஷால் அணியினர் ஆதரிக்கவில்லை.

கார்த்தி: நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றத்தைவிட செயல்பாடுதான் மிகவும் முக்கியம். தேர்தலுக்கு பிறகு ஒரே அணியாக இருந்தால் நடிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிரபு: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றவேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன். யார் பொறுப்புக்கு வந்தாலும் நலிவடைந்த நாடக, நடிகர்களுக்கு நல்லது செய்யவேண்டும். நடிகர் சங்கத்தின் கட்டிட பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

வெண்ணிற ஆடை நிர்மலா : நடிகர் சங்க தேர்தலை பலமுறை சந்தித்தாலும், இந்த தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராம்கி : நடிகர்கள் இடையே ஏற்பட்டுள்ள சிறிய விரிசல் விரைவில் சரிசெய்யப்படும். தேர்தலுக்கு பிறகு அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.

ராஜன் : நடிகர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம்.

கே.ஆர்.விஜயா: நடிகர் சங்கத்துக்கு யார் பொறுப்புக்கு வந்தாலும், நலிந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online