நடிகர் சங்கத்துக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் கலந்து கொண்டனர்.
காலை முதல் இதன் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் சிறு தள்ளு முள்ளும், சலசலப்பும் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
இதில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், அம்பிகா, ராதா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும், நாடக நடிகர்களும் மிகவும் ஆர்வமாக கலந்துக் கொண்டனர். மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 2607 வாக்குகள் பதிவாகின. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் வாக்களிக்க வரவில்லை.
சில தினங்களுக்குமுன் அஜித்துக்கு வேதாளம் படப்பிடிப்பின் போது காலில் அடிப்பட்டது. இதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலில் ஆப்ரேஷன் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பயணம் செய்யக்கூடாது என்று மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்தலுக்கு வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அஜித்தின் வாக்கு தபால் மூலமாக வந்திருக்ககூடும் என்றும் கூறப்படுகிறது.