நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி: வடிவேலு குற்றச்சாட்டு

vadivelu-poliநடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் வடிவேலு வந்தபோது விஷால் தாக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் விஷாலை சந்தித்து பேசினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து கேட்டுஅறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நடிகை சங்கீதாவை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசி இருக்கிறார்கள். இதை அங்கு நின்ற விஷால் தட்டிக்கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தாடி வைத்த ஒருவர் திடீரென்று பாய்ந்து விஷால் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

நடந்த சம்பவம் குறித்து விஷால் என்னிடம் கூறினார். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால்தான் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மோதலை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தி விடலாம் என்று அவர்கள் திட்டமிட்டு இதனை செய்துள்ளனர்.

தகுந்த பாதுகாப்புடன் தேர்தலை நடத்தி முடிக்க போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நடிகர்களும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries