நடிகர் சங்க தேர்தலில் விஷால் மீது தாக்குதல்?: வாக்கு பதிவு மையத்தில் திடீர் பரபரப்பு

vishal-sets-the-ball-rolling-for-nadigar-sangam-electionsதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி சென்னை மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தேர்தலில், பல்வேறு நடிகர்கள், நடிகையரும் அமைதியாக வந்து ஓட்டுப் போட்டு வந்தனர்.

இந்நிலையில், சரியாக 11.25 மணியளவில் தேர்தலில் முறைகேடு நடப்பதாக விஷால் அணி தரப்பிலிருந்து சிலர் குற்றச்சாட்டாக எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்பினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, வாக்குச்சாவடி மையத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், விஷால் மீது சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், விஷால் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஷால் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான சம்பவம், நடிகர் சங்க தேர்தலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online