உதயநிதியின் கெத்து படத்துடன் மோதும் தனுஷின் தங்கமகன்

1445260270-9382தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்துள்ள தங்கமகன் படத்தை டிசம்பர் 18, உதயநிதியின் கெத்து வெளியாகும் அன்று வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், தங்கமகன். அனிருத் இசையமைத்துள்ளார். சமந்தா, ஏமி ஜாக்சன் என்று இரு நாயகிகள்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை டிசம்பர் 18 வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதே டிசம்பர் 18 -ஆம் தேதி உதயநிதி நடித்துள்ள கெத்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. தங்கமகனில் நடித்துள்ள ஏமி ஜாக்சன் கெத்து படத்திலும் நடித்துள்ளது ககுறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online