இமேஜாவது ஒண்ணாவது – ஆட்டத்துக்கு தயாரான அனுஷ்கா

1445262786-4061பாகுபலி, ருத்ரமாதேவி என்று தென்னிந்தியாவில் தயாரான பிரமாண்ட சரித்திரப் படங்களின் நாயகி. அவரது கால்ஷீட்டுக்காக தமிழ், தெலுங்கு இரு இன்டஸ்ட்ரியும் காத்திருக்கிறது. இந்நிலையில், தெலுங்குப் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார், அனுஷ்கா.

ஏன்…? எதற்கு…? என்று ஆந்திராவிலும் ஆச்சரியக் குரல்கள் கேட்கின்றன. ஆனால், நட்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்…?

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்காதான் நாயகன் நாயகி எல்லாம். அவரை மையப்படுத்திதான் கதையே. இருந்தாலும், நடிகர் அல்லு அர்ஜுன் ருத்ரமாதேவியில் முக்கியமான வேடத்தில் நடித்தார். அனுஷ்காவுடனான நட்புக்கு அவர் தந்த மரியாதை அது. அதனை திருப்பிச் செலுத்தும் நேரம் இது.

அல்லு அர்ஜுன் தெலுங்கில் நடிக்கும் புதிய படத்தில் ஒரேயொரு பாடலுக்கு ஆட அனுஷ்கா சம்மதித்துள்ளார். ஒரு பாடலுக்கு ஆடினால் இமேஜ் என்னாவது என்ற கவலையெல்லாம் அனுஷ்காவுக்கு இல்லை. நட்புக்கு முன்னால் இமேஜுக்கு என்ன வேலை? தவிர, இமேஜையெல்லாம் அனுஷ்கா தாண்டி நாளாகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online