குரு விஷயத்தில் செய்நன்றி மறந்தவர் கமல்: டி.ராஜேந்தர்

1445241356-3689நடிகர் கமலஹாசன் நன்றி கெட்டவர் என்றும் தனது குருநாதர் பாலச்சந்தர் மறைவிற்கு கூட கமல்ஹாசன் வரவில்லை, குரு விஷயத்தில் செய்நன்றி மறந்தவர் என்றும் அவர் மீது டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர்: எனது மகன் சிலம்பரசன் உண்மையான தமிழன் என்றும் நடிகர் கமலஹாசன் நன்றி கெட்டவர் என்றும் தனது குருநாதர் பாலச்சந்தர் மறைவிற்கு கூட கமல்ஹாசன் வரவில்லை, குருவிஷயத்தில் செய்நன்றி மறந்தவர் என்றும் அவர் மீது குற்றம்சாட்டினர்.

தமிழ் நடிகர்கள் மட்டும் தான் இங்கு வந்து வாக்களிக்க வந்துள்ளனர் எந்த தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் ஹிந்தி நடிகர்கள்களும் இங்கு வந்து வாக்களிக்க வரவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கமல் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற சொல்லியிருக்கிறார் என்பது யதாரத்தத்தை மீறி அவர் பேசுகிறார் டி.ராஜேந்தர் என்று கூறினார்

நடிகர் சங்க விவகாரத்திலும் நன்றியை மறந்து விட்டார். அவரது படங்கள் பிரச்சினைகளில் சிக்கியபோது சரத்குமார் செய்த உதவியை அவர் மறந்து விட்டார் என்று கமல் மீது சரமாறியக அவரது ஸ்டைலில் சாடினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online