ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு-ஸ்ருதி?

mahesh-babu-and-shruthi-hassanதெலுங்கு நடிகர் மகேஷ் பாபு – ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவந்த ‘செல்வந்தன்’ படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து மகேஷ்பாபு நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி, தற்போது ‘பிரம்மோற்சவம்’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முருகதாஸ் தற்போது இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு, மகேஷ்பாபு – ஸ்ருதி இணையும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவார்கள் என தெரிகிறது. இப்படம் தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறதாம்.

ஸ்ருதி நடிப்பில் தற்போது ‘புலி’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அஜித்துடன் ஸ்ருதி நடித்துள்ள ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries