அனைத்து முக்கியப் பொறுப்புகளில் பாண்டவர் அணி வெற்றி

1445193168-3893தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி அனைத்து முக்கிய பொருப்புகளிலும் வெற்றி பெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், நடிகர்கள், நாடக நடிகர்கள் அனைவரும் ஆர்வமாக வாக்குகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து, மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்பு 9 அணி அளவில் வெற்றி வாய்ப்பு அறிவிக்கப்பட்டது.

முதலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றதாக அரிவிக்கப்பட்டது. மொத்தம் பதிவான 2607 வாக்குகளில் விஷாலுக்கு 1445 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவிக்கு 1138 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் 307 வாக்குகள் வித்தியாசத்தில் விஷால் வெற்றி பெற்றார்.

தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் முதலில் பின்தங்கிய நாசர் பின்பு சரத்குமமாரைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றிக்கனியை பறித்தார்.

துணைத் தலைவர் பதவிகளுக்கான போட்டியல், விஷால் அணியைச் சேர்ந்த கருணாஸும் பொன்வண்ணனும் வெற்றி பெற்றனர். இதில் சரத்குமார் தலைமையிலான அணி படுதோல்விடயை சந்தித்தது.

நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடிகர் சங்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online