ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் 10 எண்றதுக்குள்ள

1432187414-9618விக்ரம் நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

விஜய் மில்டன் இயக்கத்தில் இப்படம், ரோடு மூவியாக தயாராகியுள்ளது. சமந்தா, பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் சூப்பர்ஹிட்டாகும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. ஆயிரம் திரையரங்குகளுக்குமேல் இப்படம் வெளியாகிறது.

தமிழகத்தில் 400 திரையரங்குகளிலும், கேரளாவில் 100 திரையரங்குகளிலும், கர்நாடகாவில் 100 திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் 75 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 350 திரையரங்குகளிலும் படத்தை வெளியிடுகின்றனர்.

10 எண்றதுக்குள்ள படத்தின் பட்ஜெட்டுக்கு, இது அதிகமான எண்ணிக்கைதான் என்று தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சியில் உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries