ரஜினியின் அதிசயபிறவி கதைதான் அஜித்தின் வேதாளமா?

1444976632-4776அப்பாவியாக இருக்கும் ரஜினி இறந்துபோக, அவரது இடத்தில் ஆக்ரோஷமான ரஜினி இடம்பிடிப்பார். அதன் பிறகு வில்லன்களை அவர் துவசம் செய்வதுதான், அதிசயபிறவி படத்தின் ஒன் லைன்.

இதையே கொஞ்சம் தங்கை சென்டிமெண்ட் சேர்த்து, வேதாளமாக்கியிருக்கிறார் சிவா என்கிறார்கள்.

கார் டிரைவரான அப்பாவி அஜித் தெரியாத்தனமாக வில்லன்களுடன் மோத வேண்டி வருகிறது. அவரது தங்கை லட்சுமி மேனனை கொன்று அஜித்தை அடித்து துவைத்து விடுகிறார்கள் வில்லன்கள்.

குற்றுயிராக கிடக்கும் அஜித்தின் உடம்பில் இன்னொரு அஜித்தின் ஆவி புகுந்து கொள்கிறது. அது ஆக்ரோஷமான அஜித். அவருக்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது.

ஆக்ரோஷ அஜித் அப்பாவி அஜித்தின் தங்கையின் கொலைக்கு பழிவாங்குவதுடன் தனது பிளாஷ்பேக்கில் வரும் வில்லன்களையும் துவசம் செய்கிறது.

இதுதான் வேதாளம் கதை என்று கோடம்பாக்கத்தில் ஒரு குரூப் கதைவிட்டு வருகிறது. இதுதான் கதை என்றால், அதிசயபிறவியைவிட மாஸுக்குதான் வேதாளம் மிக நெருக்கமாக உள்ளது.

மாஸ் பார்த்து ரசிகர்கள் தெறித்து ஓடினார்கள். வேதாளம் ட்ரெய்லரிலேயே தெறிக்க விடலாமா என்கிறார்கள். பயமாத்தான் இருக்கு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online