நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது மகிழ்ச்சி: விஜய்சேதுபதி

604006தனுஷ் தயாரித்துள்ள ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் பலமுறை இந்த கதையை என்னிடம் கூறினார். அதில் மாற்றங்கள் செய்து என்னை கதாநாயகனாக நடிக்க வைத்து விட்டார்.

நயன்தாராவுடன் இந்த படத்தில் ஜோடியாக நடித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை தயாரித்துள்ள தனுஷ் சார் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. அனிருத்தின் இசை சிறப்பாக உள்ளது. விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய நண்பர்.

நான் முன்பு புதுப்பேட்டையில் இருந்தபோது தனுஷ்சார், செல்வாசார் ஆகியோருடன் கிரிக்கெட் ஆடி இருக்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் நடிகர்கள் பார்த்திபன், மன்சூர்அலிகான், ஆர்.கே.பாலாஜி ஆகியோர் பேசும்போது, “நானும் ரவுடிதான்” படம் சிறப்பாக வந்துள்ளது.

அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இசை அமைப்பாளர் அனிருத், “இந்த படத்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகள் மிகப்பெரிய பலம். நாங்கள் அனைவரும் முழு உழைப்பையும் இந்த படத்துக்காக கொடுத்திருக்கிறோம்” என்றார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், “அனைவரும் ரசிக்கும் வகையில் ‘நானும் ரவுடிதான்’ படம் உருவாகி இருக்கிறது. ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online