இனி நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சரத்குமார்

1445334235-0356வரும் காலத்தில் நடிகர் சங்கத்தில் போட்டியிடும் சூழல் வந்தால் நான் நிச்சயம் போட்டியிட மாட்டேன் என்றும் எனக்கு அந்த ஆசையும் இல்லை என்றும் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நடிகர் சங்கத் தேர்தல் முடிவு உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் ” நிச்சயம் கிடையாது.

நான் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளை, வெற்றி தோல்விகளைச் சந்தித்துள்ளேன். எல்லா சூழல்களிலும் ஒரே மாதிரி இருப்பவன். நடிகர் சங்க தேர்தல் என்பது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. என் மீது ஊழல் குற்றம் சுமத்தினார்கள்… அதை பொய்யாக்கியுள்ளேன். இப்போது மிஸ்டர் க்ளீனாக நிற்கிறேன். அதுதான் முக்கியம்,” என்றார்.

வரும் காலத்தில் நடிகர் சங்கத்தில் போட்டியிடும் சூழல் வந்தால் நான் நிச்சயம் போட்டியிட மாட்டேன் என்றும் எனக்கு அந்த ஆசையும் இல்லை. உண்மையில் சங்கத்துக்கு கட்டடம் கட்ட வேண்டுமே என்பதற்காகவே நான் இந்த முறை நடிகர் சங்கத்தேர்தலில் நின்றேன் என்றும் அவர் கூறினார்

மேலும், இனி நடிகர் சங்கத்தில் கவுரவப் பதவி ஏதேனும் தந்தால் ஏற்க்கொள்வேர்களா “நிச்சயம் ஏற்க மாட்டேன். இனி எனக்கு நடிகர் சங்கத்தில் எந்தப் பொறுப்பும் எனக்கு வேண்டாம் என்று ஆதங்கத்துடன் சரத்குமார் தெரிவித்தார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries