வெட்டியான் பற்றி சர்சை பேச்சு: விஷாலை கைது செய்யக்கோரி புகார்

1445331943-429தமிழகத்தை சார்ந்த வெட்டியான் என்ற தொழில் செய்பவர்களை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ள நடிகர் விஷாலை கைது செய்யக்கோரி காவல்துறை ஆணையரிடம் தமுக கட்சியை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியினர் சென்னை கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது” கடந்த 17ஆம் தேதியன்று தனியார் தொலைக்காட்சியில் பேசிய நடிகர் விசால் தமிழகத்தை சார்ந்த வெட்டியான் என்ற தொழில் செய்பவர்களை இழிவு படுத்தும் வகையில், சாவுக்கு வெட்டியான் தான் முதலில் போய் நிற்பான் என்று பேசியுள்ளார்.

அதனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் விசால் ரெட்டியை கைது செய்ய வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தமிழர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் க.அதியமான் தெரிவித்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries