ஒரு பக்க கதை பர்ஸ்ட் லுக் அக்.23-ல் வெளியாகிறது

Kalidas Jayaram in Oru Pakka Kathai-Stills-Images-Photos-Onlookers Media

Kalidas Jayaram in Oru Pakka Kathai-Stills-Images-Photos-Onlookers Media

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் எல்லோருடைய கவனத்துக்கு வந்தவர் பாலாஜி தரணீதரன். இவர் தனது இரண்டாவது படமாக ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். மேலும், மேகா ஆகாஷ் என்ற புதுமுக நடிகையும் அறிமுகமாகிறார். இப்படத்தையும், ஜெயராமின் மகள் காளிதாஸையும் கமல் ஒன்றாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு எடுத்து வருகின்றனர். விரைவில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நாளை மறுநாள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்போவதாக படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரண் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries