”நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சிட்டுக்குருவிகள்” – மன்சூர் அலி கான் அதிரடி

1443530232-1489நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கட்டுப்பாடு இல்லாத சிட்டுக்குருவிகளாக தெரிந்தார்கள் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘நானும் ரவுடிதான். இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வருவதாக இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் வெகுவாக பரவி வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, பிரசாத் தியேட்டரில் நடந்தது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலிகான், ”நானும் ரவுடிதான் படப்பிடிபின்போது உச்சி வெயில் தாங்க முடியாத அளவுக்கு கொளுத்தியது. தூரத்தில், கட்டுப்பாடு இல்லாத சிட்டுக்குருவிகள் போல் ஒரு ஜோடி தெரிந்தது.

அது, நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. அவர்கள் இருவருக்கும் வெயிலின் கொடுமை தெரியவில்லை. டைரக்டர் விக்னேஷ் சிவன் கல்லூரி மாணவர் போல் தெரிந்தார். கல்லூரி வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு வந்துள்ளவர் போல் காணப்பட்டார். காதல் காட்சிகளை அவர் அனுபவித்து படமாக்கியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries