கத்தி ரீமேக்கில் நடிக்கக்கூடாது?: சிரஞ்சீவிக்கு கடிதம் எழுதிய கிராம மக்கள்

1395424693_chiruவிஜய்-சமந்தா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். லைக்கா நிறுவனம் படத்தை வெளியிட்டது. இப்படம் குறும்பட இயக்குனர் ராஜசேகர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, படம் வெளிவருவதற்கு பெரிய இடைஞ்சலும் இருந்தது.

தற்போது, இந்த பிரச்சினை மறுபடியும் கிளம்பியுள்ளது. அதாவது, ‘கத்தி’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, இளங்காடு, விண்ணமங்கலம், கள்ள பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு சிரஞ்சீவிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், அவர் ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கக்கூடாது என கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம், மேலே கூறியுள்ளபடி ராஜசேகர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதைதான் ‘கத்தி’. எனவே, தாங்கள் அதில் நடிக்கக்கூடாது என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online